நௌரங், மே 13 (பெர்னாமா) -- வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள நௌரங் சந்தையில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தினால பல வாகனங்கள் சேதமடைந்ததோடு அருகிலிருந்த பெரும்பாலான கடைகளும் சேதமடைந்தன.
கடந்த மே 9-ஆம் தேதி அன்று பானு எனும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 15 காவலர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஒரு பயங்கரவாதக் குழுவே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் நம்புகிறது.
மேலும் இச்சம்வத்தை மேற்கொள்காட்டி காபூலை பாகிஸ்தான் கண்டித்திருக்கிறது.
இருப்பினும், இஸ்லாமாபாத்தின் குற்றச்சாட்டுகளுக்கு தலிபான் அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.
பாகிஸ்தான் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பயங்கரவாதக் குழுவைத் தாக்குவதாகக் கூறி, காபூல் மீது இஸ்லாமாபாத் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளில் இல்லாத மிக கடுமையான சண்டையில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)