Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஹன்டா நச்சுயிரியால் நோய்ச் சம்பவங்கள் அதிகரிக்கலாம்

13/05/2026 04:00 PM

ஜெனிவா, மே 13 (பெர்னாமா) -- MV HONDIUS சொகுசுக் கப்பலில் பதிவு செய்யப்பட்ட நோய்ச் சம்பவங்களுடன் தற்போது ஹன்டா நச்சுயிரி தொடர்பாக 11 தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் WHO தெரிவித்துள்ளது.

இதில் ஒன்பது சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், மேலும் சந்தேகிக்கப்படும் இரு சம்பவங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக WHO கூறியது.

MV HONDIUS கப்பலில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பயணிகள் உட்பட கப்பால் பணியாளர்களும் பயணித்தனர்.

கப்பலில் இருந்து பயணிகளை வெளியேற்றும் பணிகள் நிறைவடைந்த போதிலும், உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும் என்று, மாட்ரிட்டில் ஸ்பெயின் அரசாங்கத்துடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் WHO அதிகாரிகள், எச்சரித்திருக்கின்றனர்.

ஆகவே தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மே 2-ஆம் தேதிக்குப் பிறகு, ஹன்டா நச்சுயிரி தொடர்பாக புதிய மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் WHO தெரிவித்துள்ளது.

1978-ஆம் ஆண்டின் போர்க்காலத்தில், கொரியக் குடியரசில் உள்ள ஹன்டாண் நதி அருகே இருந்த படைவீரர்களிடையே இந்த நோய் முதன்முதலில் பரவல் ஏற்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)