இவாதே, 26 ஏப்ரல் (பெர்னாமா) -- வட ஜப்பானின் Iwate எனும் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால், மூவாயித்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீ குடியிருப்புப் பகுதிகளை நெருங்கி வருவதால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சுமார் 30 கிலோ மீட்டர் பரப்பளவிற்குப் புகை பரவியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த காட்டுத்தீயால் இதுவரை 2,700 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
மேலும், குறைந்தது எட்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீயைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நான்காவது நாளாகத் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேலும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வரும் வாரங்கள் வெப்பநிலை நீடிக்கும் என்பதால் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்படும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]