Ad Banner
 உலகம்

கொலம்பியாவில் வெடிகுண்டுத் தாக்குதல்; 14 பேர் பலி

26/04/2026 12:17 PM

காஜிபியோ, 26 எப்ரல் (பெர்னாமா) -- நேற்று மேற்கு கொலம்பியாவில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 38 பேர் காயமடைந்தனர். 

இந்த வன்முறைக்கு FARC பயங்கரவாதக் குழுவே காரணம் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொலம்பியத் தலைநகரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஜிபியோ எனும் இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முன்னாள் கிளர்ச்சியாளரான கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், முழுமையான அமைதியை நிலைநாட்ட அவர் பயங்கரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]