Ad Banner
Ad Banner
 பொது

மனவலிமையை வெளிப்படுத்தி சாதனைகள் புரிந்த எஸ்.பி.எம் மாணவர்கள்

31/03/2026 06:36 PM

காஜாங், 31 மார்ச் (பெர்னாமா) -- ஆரம்பப் பள்ளிகளுக்கான யு.பி.எஸ்.ஆர் மற்றும் படிவம் மூன்று மாணவர்களுக்கான பி.டி.3 தேர்வுகளை, எதிர்கொள்ளாத குழுவாக இருந்தபோதிலும், 2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் எழுதிய மாணவர்கள், மிகுந்த பொறுமையும் மனவலிமையும் வெளிப்படுத்தி, சிறப்பான சாதனைகளை பதிவு செய்துள்ளனர்.

கொவிட்-19 பெருந்தொற்றின் சவால்களை எதிர்கொண்டு, ஆரம்பக் கட்டத்தில் முக்கியத் தேர்வுகள் இன்றி, கல்வி செயல்முறையைக் கடந்து வந்ததாலும்
அந்த தலைமுறை, அடிக்கடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்றும் கல்வி அமைச்சர், ஃபட்லினா சிடேக் சுட்டிக்காட்டினார்.

சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக்கொண்டு சிறந்து விளங்க முடியும் என்பதை, இன்றைய முடிவுகள் காட்டுவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

''ஆக ஒட்டுமொத்தமாக, முந்தைய சோதனைகள் இன்று மிகச் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கான வலிமையை அவர்களுக்கு அளித்துள்ளன என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்,'' என்று ஃபட்லினா தெரிவித்தார்.

இன்று, காஜாங் உயர்நிலை தேசிய இடைநிலைப் பள்ளியில் SPM சோதனை முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவர் அவ்வாறு கூறினார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான ஆதரவும், கல்வி அமைச்சின் முன்னெடுப்புகளும் இச்சாதனைக்கு உந்துசக்தியாக அமைநந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, வெப்ப வானிலையின்போது அதன் தாக்கத்தைக் கையாள பள்ளிகளில் கற்றல் நடவடிக்கைகளுக்கான குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அமைச்சு ஆராயும் என்று ஃபட்லினா கூறினார்.

பள்ளியில் உள்ளவர்களின் நல்வாழ்வை தொடர்ந்து உறுதி செய்ய எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சுகாதார அமைச்சு மற்றும் அது தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

''எனவே, இந்த முடிவுகள் அனைத்தும் சுகாதார அமைச்சு மற்றும் மெட்மலேசியாவின் கவனத்தைப் பெறுவதற்கும் பரிந்துரைப்பதற்கும் தகுந்த சூழலில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்,'' என்று 

பள்ளி நடவடிக்கைகளைப் பாதுகாப்பான சூழலில் மேற்கொள்வதற்கு ஏதுவாக தேவைப்பட்டால் இல்லிறுப்பு கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை ஒரு குறுகிய கால நடவடிக்கையாகவும் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

பள்ளிகளில் குளிரூட்டிகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனையையும் அவர் நிராகரிக்கவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)