காட்மாண்டு, 29 மார்ச் (பெர்னாமா) -- நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
தலைநகர் காட்மாண்டுவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்களைக் கொன்று, ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக நம்பப்படும் குற்றச்சாட்டில், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மற்றும் உள்துறை முன்னாள் அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, ஷர்மா ஒலி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால், நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று ஷர்மா ஒலியின் ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)