Ad Banner
Ad Banner
 பொது

வெப்பமான வானிலையின் விளைவுகளைச் சமாளிக்க அமைச்சு தயார்

30/03/2026 05:42 PM

ஷா ஆலம், மார்ச் 30 (பெர்னாமா) -- நாடு முழுவதும் பல மாநிலங்களில் தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலையின் விளைவுகளைச் சமாளிக்க செயற்கை மழைப் பொழிவு உள்ளிட்ட தலையீட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு தயாராக உள்ளது.

தற்போதைய தேவைகள், தொடர்புடைய நிறுவனங்களின் தரவுகள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளின் அடிப்படைக்கு ஏற்ப அந்நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப் 
தெரிவித்தார்.

''குறிப்பாக நட்மா, விவசாயம் போன்ற தொடர்புடைய துறைகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்குவது எங்கள் பணியாகும். இதன் மூலம் அவர்கள் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய முடியும். செயற்கை மழைப் பொழிவு போன்ற பிற தலையீடுகள் இருக்குமானால், அவை அனைத்தும் வானிலை ஆய்வுத் துறையால் வழங்கப்படும் தரவுகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையிலேயே அமையும்,'', என்றார் அவர்.

இன்று, ஷா ஆலமில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  டத்தோ ஶ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப்  அவ்வாறு கூறினார்.

தற்போது, நாட்டை பாதித்து வரும் வெப்ப வானிலை, ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் வரையில் நீடிக்கும் என்று மெட்மலேசியா முன்னதாக கூறியிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)