Ad Banner
Ad Banner
 உலகம்

கியூபாவுக்கு 15,000 டன் அரிசியை நன்கொடையாக வழங்கிய சீனா

29/03/2026 05:18 PM

ஹவானா, 29 மார்ச் (பெர்னாமா) -- கியூபாவின் உணவு விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் சீனா நன்கொடையாக 15,000 டன் அரிசியை வழங்கியுள்ளது.

கடந்த பல வாரங்களாகக் கியூபாவில் தொடர்ந்து நிலவிவரும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், சீனாவின் இந்த மனிதாபிமான உதவிக்குச் கியூபா நன்றி தெரிவித்திருக்கிறது.

ஹவானா துறைமுகத்தில் 15,000 டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டன.

ஜனவரி மாதத்தில் 2,400 டன் அரிசி இரு முறை வழங்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சீனா அரிசியை வழங்கியுள்ளதாகக் கியூபாவின் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் பெட்சி டியாஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்த உதவி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையையும் பரஸ்பர உதவியையும் பிரதிபலிப்பதாகவும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சீனாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாகவும் கியூபாவிற்கான சீனத் தூதர் ஹுவா சின் கூறினார்.

பல ஆண்டுகளில் இல்லாத  மிக மோசமான பொருளாதார நெருக்கடியைக் கியூபா சந்தித்து வரும் நிலையில், சீனா அந்நாட்டிற்கு ஒரு முக்கிய நட்பு நாடாக இருந்து, பொருளாதார மற்றும் மனிதாபிமான ஆதரவை வழங்கி வருகிறது. 

கியூபாவிற்கான எரிபொருள் ஏற்றுமதி மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான தடையே இந்த நெருக்கடிக்குக் காரணமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)