ஜப்பான், 30 மார்ச் (பெர்னாமா) -- கிராண்ட் ப்ரீ கார்பந்தய போட்டியில் வெற்றி பெற்று மெர்சிடிஸ் குழுவின் கார் ஓட்டுநர் 19 வயதான கிமி அந்தொனெல்லி சாதனை படைத்துள்ளார்.
இதன் வழி, ஃபார்முலா ஒன் வரலாற்றில் உலக வெற்றியாளர் தரவரிசையில் முதலிடம் பிடித்த மிக இளம் வயது ஓட்டுநர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மெக்லேரன் குழுவின் ஆஸ்கார் பியாஸ்ட்ரி இரண்டாம் இடத்தையும், ஃபெராரி குழுவின் சார்லஸ் லெக்லெர்க் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பந்தயத்தின் தொடக்கம் அந்தொனெல்லிக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும், பந்தயத்தின் மத்தியில் அவர் முன்னிலை வகிக்க தொடங்கினார்.
சுசூகா பந்தய தளத்தில் நடைபெற்ற இந்த பந்தயத்தை, பியாஸ்ட்ரியை விட 13.722 வினாடிகள் முன்னிலையில், அந்தொனெல்லி நிறைவு செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் அந்தொனெல்லி தற்போது மொத்தம் 72 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்க 63 புள்ளிகளுடன் அவரது சகாவான ரஸ்ஸல் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
41 புள்ளிகளுடன் ஃபெராரி குழுவின் லூயிஸ் ஹாமில்டன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)