ஷா ஆலம், 03 மார்ச் (பெர்னாமா) -- கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி ஷா ஆலம், செக்ஷன் 7-லில் உள்ள பள்ளிவாசலில் உண்டியலைத் திருடிய குற்றத்திற்காக மூன்று ஆடவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாஜிஸ்ட்ரெட் முஹமட் ஷாஃபிக் சுலைமான் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு தமிழ்மொழியில் வாசிக்கப்பட்டபோது, 26 வயதான கே.தினேஸ்வரன், 22 வயதான ஆர்.நிஷன்நாஜ் மற்றும் 27 வயதான எஸ்.ஆர். டனேஷ் ஆகியோர் அதனை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அத்தண்டனை வழங்கப்பட்டது.
இன்று தொடங்கி அம்மூவருக்கும் சிறைத் தண்டனை அமல்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, தலா நான்காயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இதனிடையே, 17 வயதான மற்றொரு பதின்ம வயது நபரும், இவ்வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், 1,500 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)