Ad Banner
Ad Banner
 உலகம்

எல்லை மோதலில் 415 ஆப்கான் போராளிகள் பலி

02/03/2026 02:40 PM

பாகிஸ்தான், 2 மார்ச் (பெர்னாமா) -- கடந்த வியாழக்கிழமை முதல் தொடரும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை மோதல்களில் மொத்தம் 415 ஆப்கான் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 580-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக, பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மத்திய அமைச்சர் அத்தாவுல்லா தரார், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நேற்று மாலை நிலவரப்படி, பாகிஸ்தான் படைகள் ஆப்கானிஸ்தானின் 182 இராணுவ நிலையங்களை அழித்துள்ள நிலையில், 31 இடங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

அதோடு, தலிபான்களுக்குச் சொந்தமான 185 டாங்கிகள், ஆயுதமேந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகளை அழித்ததாகவும் அத்தாவுல்லா கூறினார்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் 46 இடங்களைப் பாகிஸ்தான் ஆகாயப்படை திறம்பட குறிவைத்து தாக்கியதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆறு மாதங்களாக ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதல்கள் அதிகரித்துள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)