கோலாலம்பூர், 28 பிப்ரவரி (பெர்னாமா) -- KWSP (ஈ.பி.எஃப்) எனப்படும் ஊழியர் சேம நிதி வாரியம், 2025-ஆம் ஆண்டிற்கான பாரம்பரிய மற்றும் ஷரியா சேமிப்பு தொகைக்கு 6.15 விழுக்காடு லாப ஈவு விகிதத்தை இன்று அறிவித்துள்ளது.
அதன் மொத்த மதிப்பு, ஏழாயிரத்து தொள்ளாயிரத்து அறுபது கோடி ரிங்கிட் ஆகும்.
''மிகப்பெரிய பங்களிப்பு பங்குச் சந்தைகளில் இருந்து வருகிறது. மொத்த வருமானத்தில் 62 விழுக்காடு பங்களிக்கிறது. அதனைத் தொடர்ந்து, நிலையான வருமான 33 விழுக்காடு பங்கு அளிக்கிறது. இந்த இரண்டு சொத்துகளும் ஆண்டுக்கான வருமானத்தில் 92 விழுக்காடு பங்களிக்கின்றன,'' என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் KWSP-இன் லாப ஈவை அறிவித்தபோது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த ஆண்டு, மொத்த விநியோகிக்கக்கூடிய வருமானமாக 8,270 கோடி ரிங்கிட்டை KWSP பதிவு செய்துள்ளது.
இது 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 7,550 கோடி ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் 9.5 விழுக்காடு அதிகமாகும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]