Ad Banner
Ad Banner
 உலகம்

மெக்சிகோவில் ஏற்பட்ட வன்முறையில் 74 பேர் பலி

24/02/2026 06:22 PM

ஜலிஸ்கோ, பிப்ரவரி 24 (பெர்னாமா) -- மெக்சிகோவில் வசித்து வந்த உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் எல் மென்ச்சோ, சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்பட்ட வன்முறையில் 25 தற்காப்பு படை அதிகாரிகள் உட்பட 74 பேர் பலியாகினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜலிஸ்கோ நகரில், போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸைக் கைது செய்ய இராணுவ வீரர்கள் முயற்சித்ததாக, அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் ஒமார் கார்சியா ஹர்ஃப்ச் கூறினார்.

எனினும்,ஒசேகுரா காயமடைந்ததால், மெக்சிகோ நகருக்கு விமானத்தின் மூலம் ஏற்றிச் செல்லும் போது இறந்ததாக, அவர் கூறினார்.

இந்நடவடிக்கை, பாதிக்கப்பட்டவரின் குழுவைச் சேர்ந்தவர்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டியதாக ஒமார் தெரிவித்தார்.

இதனிடையே, எல் மென்ச்சோ கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், பல மாநிலங்களில் கார்களைத் தீ வைத்து கொளுத்துவது மற்றும் சாலைகளைத் தடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கடைகளையும் அவர்கள் தாக்கி வருவதாக Omar கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)