கோலாலம்பூர், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, 2023-ஆம் ஆண்டு மலேசிய இரத்த அழிவுச் சோகையான, தலசீமியா (Thalassemia) பதிவு ஆண்டு அறிக்கையின் அதிகாரப்பூர்வ தரவின்படி, 9,500-க்கும் அதிகமானோருக்கு அந்நோய்க் கண்டுள்ளதாக பதிவாகியிருக்கின்றது.
சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் 102 மருத்துவமனைகள் மற்றும் இரு பல்கலைக்கழக மருத்துவமனைகளை உட்படுத்தியது அந்த எண்ணிக்கை என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
''குழந்தைப் பருவம் முதல் சுமார் 40 வயது வரையிலான ஒரு நோயாளியின் செலவு, 40 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்திற்காக, ஒரு நோயாளிக்கு, மொத்தம் 30 லட்சம் ரிங்கிட் செலவிடப்படுகிறது,'' என்றார் அவர்.
இந்நோயிற்கான செலவுகளில், முதன்மையாக, இரும்புச் சத்து குறைப்பு சிகிச்சை, அதாவது 56.9 விழுக்காடு பங்களிப்பதாக டாக்டர் சுல்கிஃப்லி கூறினார்.
அதைத் தொடர்ந்து இரத்தமாற்ற செலவுகள் 13.1 விழுக்காடு என்று இன்று மக்களவை கேள்வி பதில் நேரத்தின்போது அவர் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]