ஜலிஸ்கோ, 23 பிப்ரவரி (பெர்னாமா) -- மெக்சிகோவில் வசித்து வந்த உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் எல் மென்ச்சோ சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.
எல் மென்ச்சோ இராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அதனால் மெக்சிகோவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதாகவும் அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
எல் மென்ச்சோ குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு ஒரு கோடியே 50 லட்சம் டாலர் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்கா முன்னதாக அறிவித்திருந்தது.
போதைப்பொருள் கடத்தல் தலைவன் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஆயுதமேந்திய குழுக்கள் அந்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
நெடுஞ்சாலைகளை முடக்கியும், வாகனங்கள் மற்றும் கடைகளுக்குத் தீ வைத்தும் அக்குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தை தொடர்ந்து, மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை அந்நாடு குறிவைத்து வருகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]