கோலாலம்பூர், 22 பிப்ரவரி (பெர்னாமா) -- ஜனவரி மாதம் முழுவதும் 35 லட்சம் ரிங்கிட் இழப்புகளை உட்படுத்திய நூறு காதல் மோசடி சம்பவங்களை அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம் பதிவு செய்துள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஐந்து சம்பசங்கள் அதிகரித்துள்ளதாக, புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமாட் இசா தெரிவித்தார்.
ஜனவரி மாதத்தில் பதிவான மொத்த இழப்பு 35 லட்சம் ரிங்கிட் என்றும், கடந்தாண்டு ஜனவரியில் ஏற்பட்ட 49 லட்சம் ரிங்கிட் இழப்பைக் காட்டிலும் இது 27 விழுக்காடு குறைவு என்றும் டத்தோ ருஸ்டி கூறினார்.
இத்தகைய காதல் மோசடிகளில் பெண்களே 60 விழுக்காடு பாதிக்கப்படுவதாகவும், ஆண்கள் 40 விழுக்காடு பாதிப்பு எதிர்நோக்குவதாகவும் அவர் விவரித்தார்.
அதிலும், இதில் பாதிக்கப்படுவர்களில் 72 விழுக்காட்டினர், 30 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களாவர்.
இதனிடையே, கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தொலைப்பேசி அழைப்பு மோசடி சம்பவங்கள் கவலையளிக்கும் விதமாக இருந்ததாகவும் டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)