Ad Banner
Ad Banner
 பொது

செந்தூல் பசார் டோல் சாவடியில் சிறப்பு நடவடிக்கை; 456 சம்மன் வெளியீடு

22/02/2026 03:59 PM

கோலாலம்பூர், 22 பிப்ரவரி (பெர்னாமா) --  சீனப் புத்தாண்டை முன்னிட்டு நேற்றிரவு, செந்தூல் பசார் டோல் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்து குற்றங்களை உட்படுத்தி கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை ஜே.பி.ஜே, 456 சம்மன்களை வெளியிட்டிருந்தது.

இச்சோதனை நடவடிக்கையின் போது மொத்தம் 912 மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்ட வேளையில் அவற்றில் 152 மோட்டார் சைக்கிள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூரின் ஜே.பி.ஜே இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்தார்.

அதில், காலாவதியான ஓட்டுநர் மற்றும் மோட்டார் வாகன உரிமங்கள், உரிமம் இல்லாதது, காப்பீட்டுத் தொகை இல்லாதது, விவரக்குறிப்புகளுக்கு இணங்காத பதிவு எண்கள் மற்றும் இருள்மயமான பக்கவாட்டு கண்ணாடிகள் ஆகியவை முக்கிய குற்றங்களாக அடையாளம் காணப்பட்டதாக ஹமிடி அடாம் கூறினார்.

பெருநாள் காலங்களில் சாலைப் பாதுகாப்பு நிலைகள் உறுதி செய்யப்படுவதையும், விபத்து விகிதங்களைக் குறைப்பதையும் உறுதி செய்வதற்கான முயற்சிகளில் இத்தகைய நடவடிக்கைகளை ஜே.பி.ஜே வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கையின் போது பாகிஸ்தான், வங்காளதேசம், இந்தோனேசியா மற்றும் மியான்மர் ஆகிய 11 வெளிநாடுகளைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளோட்டிகளும் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்றிரவு மணி 8.30 தொடங்கி 11.30 வரை நடைபெற்ற இச்சோதனை நடவடிக்கைக்கு அரச மலேசிய போலீஸ் படையின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையும் ஆதரவு வழங்கி இருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)