கப்பளா பத்தாஸ், 22 பிப்ரவரி (பெர்னாமா) -- பினாங்கு, கப்பளா பத்தாஸ், பெர்மாதாங் கெராய் பெசாரில் அமைந்துள்ள நான்கு வீடுகள், இன்று அதிகாலை தீக்கிரையாகின.
தீ விபத்து குறித்து தங்கள் தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து ஆறு இயந்திரங்களுடன் 27 உறுப்பினர்களுக்கு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பினாங்கு மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சகுன் ஃபிரான்சிஸ் கூறினார்.
கப்பளா பத்தாஸ், பட்டர்வெர்த், தாசேக் கெலுகோர் மற்றும் சுங்கை பாகாப் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக ஜான் சகுன் ஃபிரான்சிஸ் தெரிவித்தார்.
B பிரிவைச் சேர்ந்த நான்கு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தினால் 80 விழுக்காடு சோதமடைந்துள்ள நிலையில், சுமார் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதன் மூலம் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்ததாக, அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட நான்கு வீடுகளும் ஒன்றோடு ஒன்று அருகாமையில் இருந்ததால் தீ வேகமாக பரவியதாக ஜான் தெரிவித்தார்.
இதனிடையே, 'தற்காப்பு' மற்றும் 'தாக்குதல்' முறைகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் இருப்பதை தடுப்பதற்காக இடைவெளிகளை உருவாக்கியதாகவும் அவர் கூறினார்.
காலை மணி 6-க்கு தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், 6.56 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டு, பின்னர் சம்பவ இடத்தில் வேறு தீ மூலங்களோ அல்லது தீப்பொறி மூலங்களோ இல்லை என்பதை உறுதிச் செய்வதற்கான பழுதுப்பார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக, ஜான் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)