Ad Banner
Ad Banner
 பொது

கார் கண்ணாடியை உடைத்த ஆடவர் கைது

22/02/2026 03:51 PM

கோலாலம்பூர், 22 பிப்ரவரி (பெர்னாமா) --  காரில் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களைத் திருடும் நோக்கத்திற்காக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடியை பிளாக் எனும் வாகன மின்கல செயலூட்டியைப் பயன்படுத்தி உடைத்த குற்றத்திற்காக, சந்தேகத்தின் பேரில் ஆடவர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆறு குற்றப் பதிவுகளோடு ஒரு போதைப்பொருள் குற்றப் பதிவையும் கொண்டிருக்கும் 22 வயதுடைய அந்த உள்ளூர் ஆடவர், நேற்றிரவு சுமார் 8.30 மணிக்கு சிலாங்கூர், டாமான்சாரா சுற்று வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக, செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி பஸ்ரி சகோனி கூறினார்.

கெப்போங் பாரு எம்.ஆர்.டி நிலையத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தமது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டதாக, கடந்த செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டவரிடம் இருந்து போலீஸ் புகார் பெற்றதைத் தொடர்ந்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எம்.ஆர்.டி நிலையங்களில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் அமைதியான பகுதிகளைக் குறிவைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதே சந்தேக நபரின் நோக்கமாகும் என்று ஏ.சி.பி பஸ்ரி சகோனி தெரிவித்தார்.

மேலும், கார் கண்ணாடியை உடைக்க பயன்படுத்தப்பட்ட கருவியில் பளிங்கு கற்களின் துண்டுகளும் இருந்ததாக, பஸ்ரி கூறினார்.

இதனிடையே, காரிலிருந்து திருடப்பட்ட பொருள்களை வெற்றிகரமாக கைப்பற்றி அதன் உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)