Ad Banner
Ad Banner
 அரசியல்

கட்சி உள் செயல்முறையின் ஒரு பகுதியாக ஜசெக சிறப்பு மாநாடு அமையும்

21/02/2026 04:42 PM

கோலாலம்பூர், 21 பிப்ரவரி (பெர்னாமா) -- நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்சியின் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான உள் செயல்முறையின் ஒரு பகுதியாக, ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜ.செ.க-வின் சிறப்பு மாநாடு அமையும்.

இச்சிறப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்து, அக்கட்சி முன்னதாகவே அறிவித்து விட்டதாக மடானி அரசாங்கத்தின் பேச்சாளரும், தொடர்பு அமைச்சருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''இது ஜசெகவின் உள் செயல்முறை. கட்சிக்குள் அந்த முடிவு அது பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும். எனவே, முடிவுகளை முன்னெடுப்பதில் ஜசெக-வின் செயல்முறை இதுவாகும்,'' என்றார் அவர்.

செயல்படுத்தப்படும் முயற்சிகளை மடானி அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் புரிந்து கொள்வதோடு, ஜ.செ.க-வில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகள், கட்சி உறுப்பினர்கள் அந்த முடிவுகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்வதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.

மேலும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய கவனம் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், கழகச் சீர்திருத்தங்களை மேம்படுத்துவதுமாகும் என்றும் அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)