கோலாலம்பூர், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் வகித்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அக்கட்சி ஏற்குமா என்பது குறித்து, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாஸ் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்சத்துவின் முன்னாள் துணைத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாஸ் இதுவரை அந்தப் பதவி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று பாஸ் தலைவரும் பெரிகாத்தான் நேஷனல் துணைத் தலைவருமாகிய டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் கூறினார்.
முன்னதாக, ஜனவரி முதலாம் தேதி முதல், தாம் பதவி விலகுவதாக அறிவித்த டான் ஸ்ரீ முகிடின் யாசினுக்குப் பதிலாக அக்கூட்டணிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து விவாதிக்க பெரிகாத்தான் நேஷனல், வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு அசாதாரண கூட்டத்தை நடத்தும் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.
பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு பின்னர், நடைபெறவிருக்கும் அந்த அசாதாரணக் கூட்டத்தில், பெரிகாத்தான் நேஷனல் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)