கோலாலம்பூர், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- தமக்கு எதிரான திவால் உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆடை வடிவமைப்பாளர் டத்தோ ஜொவியன் மண்டகி செய்த மேல்முறையீட்டை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Cekap Air என்ற பொறியியல் கட்டுமான நிறுவனத்திற்கு வட்டி உட்பட 52 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புடைய நட்பின் அடிப்படையில் பெற்றக் கடனை அவர் திருப்பிச் செலுத்தத் தவறியதால் அம்முடிவு எடுக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட திவால் உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரிய ஜொவியன் செய்த விண்ணப்பத்தையும் நீதிமன்றம் நிராகரித்ததாகக் Cekap Air நிறுவனத்தை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் சித்தி நூர் அத்திராசாத்தி ரொஹிசாட் தெரிவித்தார்.
2024-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி, கடன் வழங்கியவர் செய்த விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்தப் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூத்த உதவிப் பதிவாளர் முஹமட் ஃபைசால் சுல்கிஃப்ளி, அந்த திவால் உத்தரவைப் பிறப்பித்தார்.
தாம் பெற்ற 50 லட்சம் ரிங்கிட் கடனைச் செலுத்தத் தவறியதற்காக 2023-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி, Cekap Air நிறுவனம், ஜொவியன் மீது வழக்குத் தொடுத்த வேளையில், அதே ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி அத்தொகையைச் செலுத்த ஜொவியனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், ஜொவியன் அத்தொகையைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, Cekap Air நிறுவனம் அவர் மீதான திவால் அறிவிக்கைக்கு விண்ணப்பித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)