கோலாலம்பூர், 19 பிப்ரவரி (பெர்னாமா) -- முன்னாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹமிட் முஹமட் தமது 83-வது வயதில் மலேசிய தேசியப் பல்கலைக்கழக, HUKM மருத்துவமனையில் வியாழக்கிழமை பிற்பகல் காலமானார்.
பெர்னாமா தொடர்புக் கொண்டபோது அவரின் மகள் முர்னி அப்துல் ஹமிட் அதனை உறுதிப்படுத்தினார்.
தமது தந்தை முதுமை காரணமாக உயிரிழந்ததாக முர்னி குறிப்பிட்டார்.
அசார் தொழுகை நேரத்திற்குப் பின்னர், புத்ராஜெயா, Presint 20-இல் உள்ள முசொல்லா தாமான் செலாத்தான்னில் இறுதிச் சடங்கு நடைபெற்று, புத்ராஜெயா Presint 20 இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் அவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.
1990-ஆம் ஆண்டு மே முதலாம் தேதி நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட அப்துல் ஹமிட், 1992-இல் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் தேதி கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
பின்னர், 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை தேசிய தலைமை நீதிபதியாகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)