சியோல், 19 பிப்ரவரி (பெர்னாமா) -- தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு, இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில் தென்கொரியாவில் இராணுவச் சட்டத்தை அறிவித்து, அங்கே பதற்றத்தைத் தூண்டிய குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
குற்றவியல் சட்டம், செக்ஷன் 25-இன் கீழ் யூன் சுக் இயோல் விசாரிக்கப்பட்டார்.
மத்திய சியோல் மாவட்ட நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவால், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் தற்காப்பு அமைச்சர் கிம் யொங் யுன் உட்பட யூனும் அவரது சக அதிகாரிகளும் இராணுவச் சட்டத்தை அறிவித்து, நாட்டின் சட்டமன்ற கட்டிடத்தைச் சுற்றி வளைக்க துருப்புக்களுக்கும் போலீசாருக்கும் உத்தரவிட்டதை நீதிமன்றம் கண்டறிந்தது.
இராணுவச் சட்டத்தை அறிவித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட யூனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் முன்னதாக பரிந்துரைத்திருந்தனர்.
தென் கொரியாவில் கடைசியாக 2016-ஆம் ஆண்டில் மரணத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)