Ad Banner
Ad Banner
 உலகம்

ஜப்பான் பிரதமராக மீண்டும் சனாயே தக்காயிச்சி

19/02/2026 04:29 PM

தோக்கியோ, 19 பிப்ரவரி (பெர்னாமா) --  கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமது கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, சனாயே தக்காய்ச்சி மீண்டும் ஜப்பான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில், சனாயே தக்காய்ச்சி அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

பிரதமராக பொறுப்பேற்றுள்ள தக்காய்ச்சி கூடிய விரைவில் தமது புதிய அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியுறவு அமைச்சர் தொஷிமிட்சு மொதெகி, நிதி அமைச்சர் சத்சுகி கதாயம்மா மற்றும் தற்காப்பு அமைச்சர் சின்ஜிரோ கொயிசுமி உட்பட தக்காய்ச்சியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற பெரும்பாலான அமைச்சர் புதிய அமைச்சரவையிலும் பதவி வகிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

தமது புதிய அமைச்சரவை மற்றும் புதிய அரசாங்கத்தின் இலக்கு தொடர்பாக தக்காய்ச்சி செய்தியாளர் சந்திப்பும் நடத்தவுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கணித்ததைப் போலவே மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று தக்காய்ச்சி தமது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)