Ad Banner
Ad Banner
 பொது

1500 கோடி ரிங்கிட் முதல் 3000 கோடி ரிங்கிட் வரையில் நாட்டின் வருவாய் கசிவு தடுப்பு

19/02/2026 03:25 PM

புத்ராஜெயா, 19 பிப்ரவரி (பெர்னாமா) --  உள்துறை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மேற்கொண்ட கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரிங்கிட் முதல் 3000 கோடி ரிங்கிட் வரையிலான நாட்டின் வருவாய் கசிவு தடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய நுழைவுப் பகுதிகளிலான எல்லைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் வழி இந்த வெற்றி அடையப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டின் வருவாயில் முன்னதாக நிகழ்ந்த கசிவுகளைத் தீவிரமாகவும் திறமையாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

''எல்லையிலோ, விமான நிலையத்திலோ அல்லது துறைமுகத்திலோ கசிவுகளைத் தவிர்க்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு 1500 கோடி ரிங்கிட், 2000 கோடி ரிங்கிட், 3000 கோடி ரிங்கிட் நாம் சேகரித்தால்... நிச்சயமாக, ஒரு மனிதனாக, ஒரு குடும்ப உறுப்பினராக பி.டி.ஆர்.எம் மற்றும் அமலாக்க நிறுவனங்களில் உள்ளவர்கள் உட்பட எனது நண்பர்களுக்கு நான் மரியாதை செலுத்த வேண்டும்'', என்றார் அவர்.

நாட்டின் வருவாய் கசிவில் இருந்து வெற்றிகரமாக சேமிக்கப்பட்ட நிதி நாட்டின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவற்றை மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்றும் அன்வார் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)