Ad Banner
Ad Banner
 விளையாட்டு

டி20 கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

16/02/2026 05:05 PM

கொழும்பு, 16 பிப்ரவரி (பெர்னமா) -- டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, பாகிஸ்தான் அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ள A பிரிவில், முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

அதில், வெற்றி பெற்றுள்ள இந்தியாவை அடுத்து, மற்றொரு இடத்திற்கு பாகிஸ்தான் - அமெரிக்கா இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நேற்றிரவு கொழும்பு பிரேமதாசா அரங்கில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் அடித்தது.

ஆட்ட நாயகனான விருது பெற்ற இஷான் கிஷன் அதிரடியாக 40 பந்தில் 77 ரன்கள் குவித்த வேளையில், சூர்யகுமார் யாதவ் 32 ரன்னும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு துணை நின்றனர்.

இதனிடையே, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் இறுதியில், 18 ஓவரில் 114 ரன்களோடு வெளியேறியது.

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை இந்திய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)