Ad Banner
Ad Banner
 பொது

ஊழலை துடைத்தொழிக்கும் பணி; தமது கண்காணிப்பில் பலர் உள்ளதாக மாமன்னர் எச்சரிக்கை

16/02/2026 04:06 PM

கோலாலம்பூர், 16 பிப்ரவரி (பெர்னாமா) --  அனைத்து அரசாங்கத் துறைகளிலும் நிறுவனங்களிலும் சமரசமின்றி ஊழலை துடைத்தொழிக்கும் பணி மேற்கொள்ளப்படும் நிலையில், தமது கண்காணிப்பில் பல நபர்கள் உள்ளதாக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

ஊழல் என்பது மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் குற்றச் செயல் என்றும், அதை நாட்டின் நிர்வாகத்தில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அரசாங்க துறைகளைத் தவிர்த்து, அரச மலேசிய போலீஸ் படை, குடிநுழைவுத் துறை, அரச மலேசிய சுங்கத் துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பணிபுரிபவர்களும் ஊழலில் ஈடுபடக் கூடாது என்று சுல்தான் இப்ராஹிம் எச்சரித்தார்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் வெறுமனே மேற்கொள்ளப்படாமல், குற்றம் புரிபவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாமல் அவை அமல்படுத்தப்பட வேண்டும் என்று மாமன்னர் கூறினார்.

நேர்மையுடன் தங்கள் பொறுப்புகளைச் செய்யத் தவறும் அதிகாரிகள் இருந்தால் தாமதமின்றி அவர்களை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமது முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)