Ad Banner
Ad Banner
 பொது

ஏ.டி.எம்-மின் கொள்முதல் செயல்முறைகளின் முடக்கம் பேச்சுவார்த்தை கட்டத்தில் உள்ளது

16/02/2026 03:13 PM

பெட்டாலிங் ஜெயா, 16 பிப்ரவரி (பெர்னாமா) --  முன்னதாக உத்தரவிடப்பட்ட மலேசிய இராணுவப்படை ஏ.டி.எம்-மின் கொள்முதல் செயல்முறைகளின் முடக்கம், தற்காப்பு அமைச்சு மற்றும் நிதி அமைச்சுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கட்டத்தில் தற்போது உள்ளது.

குறிப்பாக, இது முக்கியமான செயல்பாட்டு செலவுக் கூறுகளை உள்ளடக்கியதாகும்.

ஆயுதப் படைகளின் சுமூகமான செயல்பாடு மற்றும் தயார்நிலை அளவைப் பாதிக்காத வகையில் உடனடி பரிசீலனை தேவைப்படும் இயக்க செலவுகளை ஆராய்வதில், அந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்துவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறினார்.

''எதுவாயினும், இராணுவத்தின் செயல்பாடுகள் சீராகவும் சிறப்பாகவும் தொடரும் என்பதற்கும், படையின் தயார்நிலையை நாம் தொடர்ந்து பாதுகாப்போம் என்பதற்கும் நான் உத்தரவாதம் அளிக்கிறேன்'', என்றார் அவர்.

இன்று, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள Menara Prasarana-வில் நடைபெற்ற இராணுவப்படை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் முஹமட் காலிட் செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு கூறினார்.

ஊழல் விவகாரங்களில் தொடர்புடைய ஏ.டி.எம் மற்றும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் ஆகியவற்றின் அனைத்து கொள்முதல் முடிவுகளும், கொள்முதல் செயல்முறை முழுமையாக பின்பற்றப்படும் வரையில் தற்காலிகமாக முடக்க
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி உத்தரவிட்டார்.

ஏ.டி.எம்-மின் பல மூத்த அதிகாரிகள் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில் சிக்கியதைத் தொடர்ந்து அம்முடிவு எடுக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)