கொழும்பு, 15 பிப்ரவரி (பெர்னாமா) -- டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்றிரவு கொழும்பு, பிரேமதாசா அரங்கில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இப்போட்டியை முதலில் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.
பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இறுதியாக பாகிஸ்தான் தனது அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமத்திருக்கின்றது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இப்போட்டிக்காக கொழும்புவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
வரலாற்றில், நடப்பு வெற்றியாளரான இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக 7–1 என்ற சாதனையை வைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு சிற்றரசில் நடைபெற்ற ஆசியக் கிண்ண போட்டியிலும் இந்தியா மூன்று முறை வென்று தனது ஆதிக்கத்தை நிலையாட்டியது.
தற்போது அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், மழையின் அச்சுறுத்தலுக்கு இடையிலும் இந்தப் போட்டி நடக்கவிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]