Ad Banner
Ad Banner
 உலகம்

மடகஸ்காரைத் தாக்கிய கெசானி புயல்; பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு

14/02/2026 02:55 PM

டோமாசினா, 14 பிப்ரவரி (பெர்னாமா) -- மடகஸ்கார் தீவைத் தாக்கிய கெசானி சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று நாட்களுக்குப் பிறகு 40-ஆக உயர்ந்துள்ளது.

இப்பேரிடரில் இதுவரை 40 பேர் கொல்லப்பட்டதோடு, 427 பேர் காயம் அடைந்துள்ளதாக தேசிய இடர்பாடு மற்றும் பேரிடர் நிர்வாக அலுவலகம், பி.என்.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.

இச்சூறாவளியில் மொத்தமாக 2 லட்சத்து 73 ஆயிரத்து ,417 பேர் சிக்கி பாதிக்கப்பட்டிருந்த வேளையில், அதில் அறுவர் காணாமல் போயிருப்பதாக பி.என்.ஆர்.ஜி.சி தகவல் கூறியது.

சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய நகரமான டோமாசினாவை பார்வையிட்ட, உலக உணவுத் திட்ட இயக்குநர் டானியா கூசன்ஸ், இப்பேரழிவு தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

அப்பட்டணம் சுமார் 80 விழுக்காட்டளவு சேதமுற்றிருப்பதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

அந்நகரத்தில் நீர் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்தின் சேவை ஐந்து விழுக்காட்டளவே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)