Ad Banner
 பொது

MYGOV பயனர்களின் எண்ணிக்கை 200 விழுக்காடு அதிகரிப்பு

12/02/2026 07:54 PM

ஜாலான் பார்லிமன், 12 பிப்ரவரி (பெர்னாமா) --  MyGOV செயலியை பதிவிறக்கம் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை 200 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் நான்கு லட்சத்து 37 ஆயிரம் பயனர்கள் மட்டுமே பதிவான வேளையில், நேற்று வரை அதன் எண்ணிக்கை 15 லட்சத்து 67 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தற்போது அச்செயலி 16 அரசாங்க நிறுவனங்களிடம் இருந்து 44 சேவையைக் கொண்டு அதிகரித்திருப்பது மலேசியர்களிடையே சிறந்த வரவேற்பை வழங்குவதைக் காட்டுவதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

MyGOV செயலி வழி அமல்படுத்தப்படும், ரஹ்மா உதவித் தொகை, எஸ்.தி.ஆர் மற்றும் கோரப்படாத பணத்தின் சரிபார்ப்பு முறைகள் மூலம் இந்த அதிகரிப்பு எட்டப்பட்டதாக கோபிந்த் சிங் டியோ கூறினார்.

“விண்ணப்பம் மற்றும் கட்டணம் உட்பட பொதுவான, அதிக தாக்கம், பயன்பாடுகள் மற்றும் அடிக்கடி பயன்படுத்துவது போன்ற சேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தொடர்ந்தும் கட்டம் கட்டமாகவும் இச்சேவைக்கான ஒருங்கிணைப்பு செயல்முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2026-ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்பு செயல்முறைக்காக 30-க்கும் மேற்பட்ட புதிய சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது”, என்றார் அவர்.

இன்று மக்களவையில், அரசாங்க நிறுவனங்கள் தனித்தனியாக பயன்படுதும் பல்வேறு செயலிகளை மாற்றியமைத்து, அனைத்து நிர்வகிப்புகளையும் ஒன்றிணைக்க ஒரே செயலியை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஹொங் பின் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)