Ad Banner
 உலகம்

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது வங்காளதேச வாக்களிப்பு

12/02/2026 07:52 PM

டாக்கா, 12 பிப்ரவரி (பெர்னாமா) -- வங்காளதேசத்தில், பல ஆண்டுகள் அரசியல் நெருக்கடிகளுக்குப் பிறகு நாட்டின் ஜனநாயகத்தின் முக்கியமான சோதனையாகக் கருதப்படும் நாடாளுமன்றத் தேர்தலில், வாக்காளர்கள் வாக்களித்தனர்.

பலத்த பாதுகாப்பு மற்றும் நீண்ட வரிசைகளுக்கு இடையே இன்று, வியாழக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கியது.

வங்காளதேசத்தில், 12 கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு வியாழக்கிழமை முழுவதும் தொடரப்படும் வேளையில், வெள்ளிக்கிழமை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஷெய்க் ஹசினாவின் அரசாங்கம், பல வாரங்களாக நீடித்த போராட்டங்களுக்குப் பிறகு கவிழ்ந்ததிலிருந்து வங்காளதேசத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதோடு, அவரின் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)