Ad Banner
 விளையாட்டு

கட்டார் பொது டென்னிஸ் போட்டி; கவனம் ஈர்த்த வீராங்கனைகள்

10/02/2026 07:12 PM

டோஹா , பிப்ரவரி 10 (பெர்னாமா) -- கட்டார் பொது டென்னிஸ் போட்டி..

மகளிருக்கான WTA 1000 தொடரின் ஆரம்ப சுற்றுகளில் சிறந்த முடிவுகளைப் பதிவு செய்த பல முன்னணி வீராங்னைகள் அரங்கின் கவனம் ஈர்த்தனர்.

ரஷ்யாவின் இளம் வீராங்கனையான மீரா என்ரீவா போலாந்தின் மெக்டா லெனெட்டேவுடன் களமிறங்கினார்.

ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-6, 6-1 என்ற நேரடி செட்களில் வெற்றிப் பெற்று என்ரீவா மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

இதனிடையே, செக் குடியரசின் திரேசா வெலென்டோவா  7-6, 6-1 என்ற நேரடி செட்களில் பிலிப்பைன்சின் அலெக்சான்ரா எல்லாவை தோற்கடித்து அடுத்த சுற்றில் கால் வைத்தார்.

முதல் செட்டை கைப்பற்றுவதில் சற்று போராடிய வெலென்டோவா, இரண்டாம் செட்டை மிக எளிதில் வென்றார்.

மற்றோர் ஆட்டத்தில், நடப்பு வெற்றியாளரனான அமன்டா அனிஸ்மிமொவா காயம் காரணமாக அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் வாய்ப்பை நழுவ விட்டார்.

கரோலினா பிளிஸ்கோவா உடன் போட்டியிட்ட அனிஸ்மிமொவா வெற்றியை தீர்மானிக்கும் செட்டில் 1-4 என்று பின்தங்கிய நிலையில் ஆட்டத்தில் இருந்து விலக நேர்ந்தது.

எனவே, செட்க் குடியரசின் Anisimova அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)