Ad Banner
 பொது

டான் ஶ்ரீ முஹமட் இசாவுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

10/02/2026 06:53 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- முன்னாள் பெல்டா தலைவர், டான் ஶ்ரீ முஹமட் இசா அப்துல் சமாட் மீதான 30 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ஊழல் வழக்கின் குற்றவாளி மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை, கூட்டரசு நீதிமன்றம் மீண்டும் இன்று நிலைநிறுத்தியதை அடுத்து, அவர் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிப்பார்.

டத்தோ நோர்டின் ஹசான் தலைமையிலான மூன்று கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு, அரசுத் தரப்பு மேல்முறையீட்டை அனுமதித்ததோடு, ஒன்பது ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முஹமட் இசாவின் விடுதலையையும் ரத்து செய்தது.

டத்தோ லீ ஸ்வீ செங் மற்றும் டத்தோ சே முஹமட் ருசிமா கசாலியுடன் விவாதித்த டத்தோ நோர்டின், உயர் நீதிமன்றம் விதித்த அத்தண்டனை பொருத்தமானது மற்றும் சட்டத்திற்கு உட்பட்டது என்று தெரிவித்தார்.

76 வயதான முஹமட் இசாவுக்கு செவ்வாய்க்கிழமை முதல் சிறைத் தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் கைது ஆணையைப் பிறப்பித்தது.

2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், 54 ஆண்டுகள் சிறைத் தண்டனையை, ஒரு கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது அதனை செலுத்த தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்ததை, நீதிபதிகள் குழு நிலைநிறுத்தியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)