கோலாலம்பூர், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- GIG தொழிலாளர்களின் நிலையை அங்கீகரிப்பதிலும் அவர்களின் நலனைப் பாதுகாப்பதிலும் தெளிவான சட்ட கட்டமைப்பை வழங்குவதற்காக இவ்வாண்டு 2025-ஆம் GIG தொழிலாளர் சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தும்.
நாட்டின் மொத்த ஆள்பலத்தில், 21.8 விழுக்காட்டைக் கொண்ட 34 லட்சத்து 50 ஆயிரம் முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வலுப்படுத்துவதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
1969-ஆம் ஆண்டு தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ததன் வழி, வேலை நேரத்திற்கு வெளியே ஏற்படும் விபத்துகள் உட்பட வேலை செய்யும் காலக்கட்டம் முழுவதும் பாதுகாப்பை வழங்கும் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியதாக ரமணன் கூறினார்.
''இத்திட்டம் ஊழியர்களின் நல்வாழ்வையும் அவர்களது குடும்பங்களுக்கான ஆதரவையும் உறுதி செய்வதற்காக பல்வேறு சலுகைகளை வழங்குகிறது,'' என்றார் அவர்.
இன்று, மக்களவையில் மனிதவள அமைச்சிற்கு ஆற்றிய அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நிறைவு செய்யும்போது டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)