Ad Banner
 உலகம்

நியூ யார்க்கை தாக்கிய கடுமையான குளிர் காலநிலை; 18 பேர் உயிரிழப்பு

10/02/2026 04:57 PM

நியூ யார்க், 10 பிப்ரவரி (பெர்னாமா) --  அமெரிக்காவின், நியூ யார்க் நகரை தாக்கி வரும் கடுமையான குளிர் காரணமாக 18 பேர் உயிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜனவரி மாத இறுதியில் இருந்து அந்நகரம் நீண்டகால குளிர் அலையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதில் தொடர்ச்சியாக 13 நாட்கள் 0 பாகை செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவான நிலை பதிவாகியுள்ளதாக நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி கூறியுள்ளார்.

கடந்த வார இறுதியில் மேலும் ஒருவர் அதிக குளிரால் வீதியில் விழுந்து உயிரிழந்த வேளையில், ஒவ்வொரு இழப்பும் பேரிடராகும் என்று ஸோஹ்ரான் மம்தானி கவலை தெரிவித்திருக்கிறார்.

இவ்வாரம் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

"குறைந்தபட்சம் எட்டு முதல் ஒன்பது அங்குலம் வரை பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இன்னும் அதிகமாக இருக்கலாம். இது வெறும் பனிப்பொழிவு மட்டுமல்ல. இந்தப் புயல் அதனுடன் கடுமையான குளிரையும் கொண்டு வரும். அடுத்த வாரம் முழுவதும் கடுமையான குளிர் நீடிக்கும். நியூயார்க்கில் சுமார் எட்டு ஆண்டுகளை விட இது மிகவும் குளிராக இருக்கும்", என்றார் அவர்.

இம்முறை பனிப்புயல் அந்நாட்டின் பெரும்பகுதியைச் சூழ்ந்துள்ளது.

இதனால், பல ஆண்டுகளாக ஒருபோதும் காணாத கடும் குளிரை லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)