Ad Banner
 பொது

அதிக வருமானம் இருந்தும் பி.டி.பி.டி.என் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவோருக்கு மட்டுமே கட்டுப்பாடுகள்

09/02/2026 06:54 PM

கோலாலம்பூர், 09 பிப்ரவரி (பெர்னாமா) -- அதிக மற்றும் போதுமான அளவு வருமானம் இருந்தும், தேசிய உயர்க்கல்வி கடனுதவி திட்டம், பி.டி.பி.டி.என் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுபவர்களுக்கு மட்டுமே, வெளிநாட்டிற்கானப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பட்டப்படிப்பை முடித்த அல்லது இன்னும் வருமானம் இல்லாத கடன் வாங்குபவர்கள் மீதே இந்த கடுமையான நடவடிக்கை விதிக்கப்படாத நிலையில், B40 அல்லது M40 பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது எவ்வாறு விதிக்கப்படும் என்று உயர்கல்வி துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

''கடன் சுமை மற்றும் பட்டதாரிகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமம் குறித்து அரசாங்கம் எப்போதும் அக்கறைக் கொண்டுள்ளது. எனவே, தற்போதைய கொள்கைகளின் கீழ், பட்டம் பெற்ற பிறகு கடன் சுமையைக் குறைக்க உதவும் பல்வேறு முயற்சிகளை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்,'' என்றார் அவர்.

வெளிநாடுகளுக்குச் செல்வதில் இருந்து கருப்புபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள, இன்னும் நிரந்தர வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு உதவுவதற்கான அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து, திங்கட்கிழமை மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அடாம் அட்லி அவ்வாறு பதிலளித்தார்.

தற்போது, ​​கடனைத் திருப்பிச் செலுத்தாத கடன் வாங்குபவர்களில் சுமார் 7 விழுக்காட்டினர் தடைகளுக்கு உள்ளாகியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)