Ad Banner
 பொது

அடுத்தாண்டு தொடங்கி படிப்படியாக பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்

11/02/2026 03:12 PM

கோலாலம்பூர், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டின் கல்வி முறை விவேகத்துடன் இருப்பதையும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் உறுதி செய்யும் பொருட்டு, அடுத்தாண்டு முதல் படிப்படியாக பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டத்தை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தும்.

2027-ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு மற்றும் முதலாம் படிவத்திற்குச் செல்லும் மாணவர்களை உட்படுத்தி இப்புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தும். 

பின்னர், 2028-ஆம் ஆண்டில் இரண்டாம் ஆண்டு மற்றும் இரண்டாம் படிவத்திற்கு விரிவுபடுத்தப்படும் என்று, கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார். 

''தேவைப்பட்டால் பாடத்திட்ட மதிப்பாய்வுகள் நடத்தப்படும். எனவே சில பாடங்களுக்கு பாடத்திட்ட மதிப்பாய்வுகளை அவ்வப்போது செய்யலாம். எனினும், கல்வி அமைச்சு எப்போதும் அது நாட்டின் கல்வி கொள்கையுடன் ஒத்துப்போவதை உறுதி செய்கிறது. அதே வேளையில், நாம் கருத்தில் கொள்ளும் அனைத்து பிரிவுகளிலிருந்தும் அது சமநிலையில் இருக்க வேண்டும்,'' என்றார் அவர்.

இதனிடையே, தேசிய மற்றும் அரசியல் கல்வியின் கூறுகளை வரலாற்றுப் பாடத்திலும், ஜனநாயகம் எனும் அம்சத்தை முன்கூட்டியே வெளிப்படுத்த குடியியல் பாடம் வழியாகவும் அமைச்சு ஒருங்கிணைத்துள்ளதாக வோங் கூறினார்.

தேசபக்தியை வலுப்படுத்துதல் மற்றும் மாணவர்களிடையே நேர்மறையான அடையாளத்தை உருவாக்குதல் உள்ளிட்ட நான்கு முக்கிய கூறுகளில் கவனம் செலுத்தி, மடானி தலைமுறை பண்புகளை உருவாக்கும் திட்டத்தையும் இவ்வாண்டு தொடங்கி கல்வி அமைச்சு செயல்படுத்துகிறது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை