Ad Banner
 பொது

புறநகரைச் சார்ந்த சமூகத்தார் மீது கவனம் செலுத்தப்படும்

09/02/2026 05:19 PM

ஜாலான் பார்லிமன், 09 பிப்ரவரி (பெர்னாமா) --  நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முடிவுகள் ஆய்வகத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.

மாறாக, மக்களுக்கு நேரடி நன்மைகளை வழங்கும் நடைமுறை தீர்வுகளாகவும் அவை கொண்டுள்ளன.

விவேகமான விவசாயம், நீர் நிர்வாக மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தல் ஆகியவற்றின் மூலம் புறநகரைச் சார்ந்த சமூகத்தார் மீது கவனம் செலுத்தப்படும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் டத்தோ சாங் லி காங் தெரிவித்தார்.

மலேசிய விண்வெளி நிறுவனம் MYSA செயல்படுத்திய நெல் பயிர் புவிசார் தகவல் அமைப்பான MakGeoPadi, அதன் செயலாக்கத்தின் முக்கிய முயற்சியாக கருத்தப்படுகிறது என்று டத்தோ சாங் லி காங் கூறினார்.

இது தற்போது இரண்டு லட்சத்து ஆறாயிரம் ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 12 முக்கிய நெல் களஞ்சியங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவது உண்மையான நெல் சாகுபடி பகுதிகளை துல்லியமாகக் கண்டறிய அனுமதிக்கிறது. இதனால் தகுதியான நெல் விவசாயிகளுக்கு அரசாங்க அரிசி மானியங்களை இலக்கு முறையில் விநியோகிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதுடன் அதை சேமிக்கவும் செய்கிறது. மேலும், இந்த அமைப்பில் உள்ள மண் சுயவிவர நிலைப்பாடு, விவசாய நிறுவனங்கள் நெல் வயல் மண் நிலைமைகளை ஆரம்ப மதிப்பீட்டைச் செய்யவும், பொருத்தமான தீர்வு நடவடிக்கைகளைத் திட்டமிடவும் உதவுகிறது", என்றார் அவர்.

நாட்டின் புதுமைகள், கிராமப்புற சமூகங்கள் மற்றும் சிறு நிறுவனங்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான அமைச்சின், உத்தி குறித்து பாலிக் பூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் பக்தியார் வான் சிக் எழுப்பிய கேள்விக்கு டத்தோ சாங் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)