ஈப்போ, 09 பிப்ரவரி (பெர்னாமா) -- பேராக்கில் மாண்டரின் ஆரஞ்சுகளின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு சற்று குறைந்துள்ளது.
இதனால் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமான அப்பழத்தை வாங்கும் மொத்த விற்பனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவோருக்கு மிகவும் மலிவான விலையில் ஆரஞ்சுப் பழங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக, ஈப்போ, கம்போங் ஜாவாவில் உள்ள சின் லீ, பழ மொத்த விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் டான் ஐக் லீ தெரிவித்தார்
"15 கொள்கலன்களில் ஆரஞ்சுப் பழங்கள் உள்ளன. கடந்த வருடம் சற்று குறைவாக இருந்தது. இவ்வாண்டு அதிகமாக உள்ளது. இவ்வாண்டு பழங்கள் மலிவாக கிடைப்பதால் இன்னும் கொஞ்சம் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் கடைசி நேரத்தில் தான் வருவார்கள். ஒவ்வோர் ஆண்டும் இப்பத்தான் இருக்கும்", என்றார் அவர்.
மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் சீனர்களுக்கு உரிய பழமாக மட்டுமில்லை.
மாறாக மற்ற இனத்தோரின் கவன ஈர்ப்பு பழமாகவும் அது உள்ளதாக மற்றொரு வியாபாரியான கொய் சிங் சோய் என்பவர் தெரிவித்தார்.
"மூன்று இனங்களும் உள்ளன. நிச்சயமாக மூவினமும் இதை விரும்பும்.ஆண்டிற்கு ஒருமுறை தானே. மலாய்க்காரர்களும் இதை விருப்பத் தேர்வாகக் கொள்கின்றனர். அவர்களுக்கும் ஆண்டிற்கு ஒருமுறை தானே சுவைக்கின்றனர்", என்றார் அவர்.
சீனப் புத்தாண்டிற்கு சிறப்புச் சேர்க்கும் முக்கிய அம்சங்களில் ஆரஞ்சுப் பழமும் ஒன்றாகும் என்பதால், பெருநாள் கொண்டாடத்திற்கு சில நாட்களுக்கு முன்பே, அந்த பழங்களைப் அதிகளவில் பல இடங்களில் காண முடிகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)