புத்ராஜெயா, 09 பிப்ரவரி (பெர்னாமா) -- துர்நாற்றம், தூய்மை மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை உள்ளடக்கி இருப்பதால் மக்களிடையே அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்வது பொருத்தமற்றது என அரசாங்கம் கருதுகிறது.
இனம் மற்றும் மதம் சார்ந்த உணர்வுகளை அடிப்படையாக கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது அல்ல.
மாறாக, மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.
கொள்கை அடிப்படையில் பன்றி வளர்ப்பு தொழிலை எதிர்க்கவோ அல்லது இஸ்லாம் அல்லதவர்கள் அதனை உண்பதற்கோ அரசாங்க தடை செய்யவில்லை.
மாறாக சர்ச்சையை ஏற்படுத்தாத பகுதிகளில் விலங்குகளுக்கான பண்ணையை மேம்படுத்த வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் விவரித்தார்.
"சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் நான் வேண்டாம் என்று பதிலளிப்பேன். ஏனென்றால், நீங்கள் சர்ச்சையை ஏற்படுத்தாத இடத்தைத் தேடினால். ஏனென்றால், பிரச்சனை உண்மையானது. துர்நாற்றம் பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனை, தூய்மையின்மை பிரச்சினை ஒரு உண்மையான பிரச்சினை. உருவாக்கப்பட்ட பிரச்சனை அல்ல. எனவே, ஒருமித்த கருத்து கொண்ட இடத்தைக் கண்டறியவும்", என்றார் அவர்.
வளர்ந்து வரும் நாடுகளில் சுகாதாரத்தின் தாக்கத்தைப் பாதிக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும், அதனை மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளில் செயல்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்பதை அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)