Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மயாமி டென்னிஸ்; இறுதி ஆட்டத்தில் சின்னர்

28/03/2026 05:42 PM

மயாமி, 28 மார்ச் (பெர்னாமா) --  மயாமி பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு யானிக் சின்னர் தேர்வாகினார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அவர் அலெக்சாண்டர் ஸ்வேரெவ்வுடன் மோதினார்.

பலம் பொருந்திய ஆட்டக்காரர்கள் களமிறங்கிய அரையிறுதி ஆட்டம் விருவிருப்பாக அமைந்தது.

முதல் செட்டில் 6-3 என்ற புள்ளிகளில் யானிக் சின்னர் வெற்றி பெற்றாலும், இரண்டாம் செட்டில் அவர் கடுமையான போட்டியை எதிர்கொண்டார்.

இருப்பினும், திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி இரண்டாம் செட்டை 7-6 என்ற புள்ளிகளில் சின்னர் கைப்பற்றினார்.

இறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான சின்னர், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் மோதவுள்ளார்.

இதனிடையே மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்சின் ஆர்தர் ஃபிளிஸ் ஜிரிவுடன் விளையாடிய ஜிரி லெஹெக்கா 6-2 6-2 என்ற நேரடி செட்களில் எளிதாக வெற்றி பெற்றார்.

இவர்களின் ஆட்டம் சுமார் 80 நிமிடங்கள் வரை நீடித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)