புத்ராஜெயா, பிப்ரவரி 08 (பெர்னாமா) -- இரு தரப்பு வர்த்தகத்திலும் முதலீட்டிலும் ரிங்கிட் மற்றும் ரூபாயின் பயன்பாட்டை விரைவுபடுத்த மலேசியாவும் இந்தியாவும் இணக்கம் கொண்டுள்ளன.
இரு நாடுகளின் நாணயங்களையும் பயன்படுத்தி உள்நாட்டு நாணய தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக பேங்க் நெகாரா மலேசியா BNM-மும் இந்திய மத்திய வங்கியும் தொடர்ந்து நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ளவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''இதேபோல, இலக்கவியல் இணைப்பு, ஆற்றல் மற்றும் மின்னியல் உபரிப்பாகத்திலும்,'' என்றார் அவர்.
மலேசிய-இந்திய இருவழி வர்த்தகம், கடந்த ஆண்டு எட்டப்பட்ட1859 கோடி அமெரிக்க டாலரைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுடன் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான கூடுதல் வழிகளையும் வாய்ப்புகளையும் ஆசியான் கண்டறிந்தால், மலேசியா நிச்சயமாக பயனடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)