கோலாலம்பூர், 07 பிப்ரவரி (பெர்னாமா) -- சீனப் புத்தாண்டை முன்னிட்டு வழக்கமான டோல் கட்டணத்தில் இருந்து 50 விழுக்காடு கழிவை வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
பல்லின மக்களின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு இணங்க, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டதாக, பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி கூறினார்.
சீனப் புத்தாண்டு அல்லது ரமலான் மாத விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்புபவர்களின் பயணச் செலவுகளை, இந்த கழிவு குறைக்கும் என்று நம்பப்படுவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி குறிப்பிட்டிருந்தார்.
பிப்ரவரி 14-ஆம் தேதி பின்னிரவு மணி 12.01 தொடங்கி, 15-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை டோல் கட்டண கழிவு வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)