Ad Banner
 பொது

சைரன் ஒலி, நீல நிற விளக்குகளுடன் பயணித்த வாகனம் அமைச்சுக்கு சொந்தமானது

06/02/2026 04:42 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 06 (பெர்னாமா) -- இரு தினங்களுக்கு முன்னர், Maju Expressway, MEX நெடுஞ்சாலையில், சாலை நெரிசலின்போது வாகனங்களை முந்திச் செல்வதற்காக, சைரன் ஒலியுடன் நீல நிற விளக்குகளை பயன்படுத்திய வாகனம், அமைச்சு ஒன்றின் அலுவல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனம் என்பதை போலீஸ் உறுதிபடுத்தியது.

அவ்வாகனத்தில் நீல நிற சுழலும் விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு சாலைப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநரிடமிருந்தும் ஒப்புதல் பெறப்பட்டிருந்ததாக, கோலாலம்பூர், போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஏசிபி முஹமட் சம்சூரி முஹமட் இசா இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரை போலீசார் அடையாளம் கண்டுள்ள நிலையில், சோதனை செய்யும் நோக்கத்திற்காக அந்நபர் விரைவில் அழைக்கப்படுவார் என்று முஹமட் இசா மேலும் கூறினார்.

இதன் தொடர்பிலான காணொளி பரவலாக பகிரப்பட்ட வேளையில் அது குறித்த தகவல்களை வழங்கும்படி போலீஸ் நேற்று பொதுமக்களை கேட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)