Ad Banner
 பொது

கருத்துச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் தரப்புடன் அரசாங்கம் சமரசம் காணாது

07/02/2026 06:43 PM

கோம்பாக், 07 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் அல்லது இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே பதற்றத்தைத் தூண்டும் அளவிற்கு கருத்துச் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் எந்தவொரு தரப்புடன் அரசாங்கம் சமரசம் காணாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்திருக்கிறார்.

ஒவ்வொரு தனிநபருக்கும் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்த சுதந்திரம் இருந்தாலும், அது வெறுப்பைத் தூண்டவோ அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கவோ பயன்படுத்தப் படக்கூடாது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

மதம் மற்றும் இனம் போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் வழி, பிரபலமாக விரும்பும் மனப்பான்மை, இன ஒற்றுமையையும் தேசிய நல்லிணக்கத்தையும் சீர்குழைக்கும் என்று அவர் நினைவூட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)