புக்கிட் மெர்தாஜாம், பிப்ரவரி 07 (பெர்னாமா) -- பினாங்கு, துவான்கு பைனுன் ஆசிரியர் கல்விக் கழக வளாகத்தில் இன்று பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் நடத்தப்படும் இவ்விழாவில் பாரம்பரிய முறையில் போட்டிகளும் நடத்தப்பட்டன.
துவான்கு பைனுன் ஆசிரியர் கல்விக் கழகத்தின் தமிழ் ஆய்வியல் துறையும் தமிழ் மொழி கழகமும் இணைந்து விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
பாரம்பரிய முறையில் அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில், எட்டு வகுப்பு வாரியாக பொங்கல் வைக்கப்பட்டது.
மேலும், கோலமிடுதல், உறியடித்தல், பூ கட்டுதல், தோரணம் பின்னுதல் போன்ற பல்வேறு பாரம்பரிய போட்டிகளும் நடத்தப்பட்டன.
இவ்விழாவை மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவதினால் பண்பாடும் கலாச்சாரமும் தொடர்வதாக தமிழ் ஆய்வியல் துறைத் தலைவர் மணிமாறன் கோவிந்தசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து, மாணவர் குழுமப் பேச்சு, கவிதை ஒப்புவித்தல், பாடல் நிகழ்ச்சிகள் உட்பட மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)