Ad Banner
Ad Banner
 விளையாட்டு

இங்கிலீஷ் பிரீமியர் லீக்; டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி சமநிலை

02/02/2026 07:38 PM

லண்டன், பிப்ரவரி 02 (பெர்னாமா) -- இங்கிலீஷ் பிரீமியர் லீக் காற்பந்தாட்டம்.

டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

இதன்வழி 24 ஆட்டங்களில் 47 புள்ளிகளுடன் சிட்டி ஆர்சனலை விட ஆறு புள்ளிகள் பின் தங்கி உள்ளது.

லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டி தனது முதல் கோலைப் போட்டது.

பின்னர் முதல் பாதியின் இறுதியில் ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து மென்செஸ்டர் சிட்டி ஆட்டத்தைத் தன் வசம் வைத்திருந்தது.

எனினும், இடைவேளைக்குப் பின்னர் ஆட்டத்தின் 53 மற்றும் 70வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பரின் இரு கோல்கள் அடிக்கப்பட்டு ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)