Ad Banner
 விளையாட்டு

இங்கிலாந்து பிரிமியர் லீக்: புல்ஹாமை வீழ்த்திய மென்செஸ்டர் யுனைடெட்

02/02/2026 07:59 PM

லண்டன், பிப்ரவரி 02 (பெர்னாமா) -- ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட், புல்ஹாமை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

இதன்வழி, தற்காலிக பயிற்சியாளர் மைக்கேல் கேரிக்யின் தலைமையில் மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

19வது நிமிடத்தில் பிரேசிலின் ஆட்டக்காரர் புருனோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி முதல் கோலை அடித்து மென்செஸ்டர் யுனைடெட்-ஐ முன்னிலைப்படுத்தினார்.

அதன் பின்னர், 56வது நிமிடத்தில் மேத்தியஸ் குன்ஹா அதன் இரண்டாவது கோலை அடித்தார்.

ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் ராவுல் ஜிமேனேஸ், புல்ஹாமுக்கான முதல் கோலை அடித்த நிலையில் 91வது நிமிடத்தில் கெவின் அடித்த கோல் ஆட்டத்தைச் சமநிலைப்படுத்தியது.

அதன் பின்னர், ஆட்டம் விறுவிறுப்பாக நீடித்த நிலையில் பெஞ்சமின் செஸ்கோ 94வது நிமிடத்தில் தமது அணிக்கான மூன்றாவது கோலை அடித்து மென்செஸ்டர் யுனைடெட் பட்டியலில் நான்காம் இடத்திற்குச் கொண்டுச் சென்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)